21. நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
الترجمة التاميلية
وَإِنَّ لَكُمۡ فِي ٱلۡأَنۡعَٰمِ لَعِبۡرَةٗۖ نُّسۡقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக கால்நடையில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலிருந்து (வெளிவரக்கூடிய பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அதிகமான பலன்களும் உள்ளன. அவற்றிலிருந்து (கிடைக்கும் மாமிசத்தையும்) நீங்கள் புசியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف