49. (அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்).
الترجمة التاميلية
أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ
"அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(சிகரவாசிகளை சுட்டிக் காண்பித்து) “அல்லாஹ் அவர்களை (தன்) கருணையைக் கொண்டு அடையமாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தது இவர்கள்தானா?” (என்று பெருமையடித்து மறுத்தவர்களிடம் அல்லாஹ் கேட்பான். பிறகு,) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள். உங்கள் மீது பயமில்லை. நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்”(என்று அல்லாஹ் சிகரவாசிகளுக்குக் கூறுவான்.)
الترجمة التاميلية - عمر شريف