17. (மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)
الترجمة التاميلية
وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ
அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுது பராமுகமாக இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்பைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக இருக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف