5. (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!
الترجمة التاميلية
بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ
அப்படியல்ல! "இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
மாறாக, (அவர்களில் சிலர்) கூறினர்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” மாறாக, (மற்றும் சிலர் கூறினர்:) “இவர் (-முஹம்மது இறைவன் மீது) இதை இட்டுக்கட்டுகிறார்.” மாறாக, (வேறு சிலர் கூறினர்): “இவர் ஒரு கவிஞர். ஆகவே, முந்தியவர்கள் அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.”
الترجمة التاميلية - عمر شريف