43. இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
الترجمة التاميلية
أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களை (நம்மிடமிருந்து) பாதுகாக்கின்ற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? அவர்கள் (-அந்த கடவுள்கள்) தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف