50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.
الترجمة التاميلية
وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ
"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்."
Jan Trust Foundation - Tamil translation
எனக்கு முன் உள்ள தவ்றாத்தை (நான்) உண்மைப்படுத்துபவராகவும் உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய)ஓர் அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف