199. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்.
الترجمة التاميلية
وَإِنَّ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَمَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡكُمۡ وَمَآ أُنزِلَ إِلَيۡهِمۡ خَٰشِعِينَ لِلَّهِ لَا يَشۡتَرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ أُوْلَـٰٓئِكَ لَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡۗ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
Jan Trust Foundation - Tamil translation
வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் உண்டு. அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக ஒரு சொற்பகிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்ற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிக விரைவானவன்.
الترجمة التاميلية - عمر شريف