168. இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!''
الترجمة التاميلية
ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; "அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று).
Jan Trust Foundation - Tamil translation
(நயவஞ்சகர்கள் தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (கொல்லப்பட்ட) அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்று தங்கள் சகோதரர்களுக்கு கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தை தடுங்கள்!''
الترجمة التاميلية - عمر شريف