36. அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்.)
الترجمة التاميلية
فَلَمَّا وَضَعَتۡهَا قَالَتۡ رَبِّ إِنِّي وَضَعۡتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا وَضَعَتۡ وَلَيۡسَ ٱلذَّكَرُ كَٱلۡأُنثَىٰۖ وَإِنِّي سَمَّيۡتُهَا مَرۡيَمَ وَإِنِّيٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
Jan Trust Foundation - Tamil translation
(இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது "என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிகஅறிந்தவன். பெண்ணைப் போன்று ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். நிச்சயமாக நான் அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னைக்கொண்டு பாதுகாக்கிறேன்!'' எனக் கூறினாள்.
الترجمة التاميلية - عمر شريف