24. இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.
الترجمة التاميلية
ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَٰتٖۖ وَغَرَّهُمۡ فِي دِينِهِم مَّا كَانُواْ يَفۡتَرُونَ
இதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
Jan Trust Foundation - Tamil translation
"சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது'' என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். இது தங்கள் மார்க்கத்தில் (அவர்கள்) பொய் கூறுபவர்களாக இருந்தது, அவர்களை ஏமாற்றிவிட்டது.
الترجمة التاميلية - عمر شريف