75. அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை.
الترجمة التاميلية
۞ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبۡدٗا مَّمۡلُوكٗا لَّا يَقۡدِرُ عَلَىٰ شَيۡءٖ وَمَن رَّزَقۡنَٰهُ مِنَّا رِزۡقًا حَسَنٗا فَهُوَ يُنفِقُ مِنۡهُ سِرّٗا وَجَهۡرًاۖ هَلۡ يَسۡتَوُۥنَۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்; பிறிதொருவனுக்கு உடமைக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத ஓர் அடிமை. இன்னும் ஒருவர் அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். (இவ்விருவரும்) சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அல்லாஹ்விற்கே. எனினும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف