111. ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية
۞يَوۡمَ تَأۡتِي كُلُّ نَفۡسٖ تُجَٰدِلُ عَن نَّفۡسِهَا وَتُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
ஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பற்றி தர்க்கித்ததாகவே அது வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). (அந்நாளில்) ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்தவற்றுக்கு முழு கூலி கொடுக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف