29. (நபியே!) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்.
الترجمة التاميلية
وَقُلِ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَن شَآءَ فَلۡيُؤۡمِن وَمَن شَآءَ فَلۡيَكۡفُرۡۚ إِنَّآ أَعۡتَدۡنَا لِلظَّـٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمۡ سُرَادِقُهَاۚ وَإِن يَسۡتَغِيثُواْ يُغَاثُواْ بِمَآءٖ كَٱلۡمُهۡلِ يَشۡوِي ٱلۡوُجُوهَۚ بِئۡسَ ٱلشَّرَابُ وَسَآءَتۡ مُرۡتَفَقًا
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம் (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. அவர்கள் உதவி தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திராவத்தைப் போன்ற நீரைக் கொண்டே உதவப்படுவார்கள். (அது ஒரு) மகா கெட்ட பானம். அது ஒரு தீய ஓய்விடம் (சாயுமிடம்) ஆகும்.
الترجمة التاميلية - عمر شريف