141. (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
الترجمة التاميلية
۞وَهُوَ ٱلَّذِيٓ أَنشَأَ جَنَّـٰتٖ مَّعۡرُوشَٰتٖ وَغَيۡرَ مَعۡرُوشَٰتٖ وَٱلنَّخۡلَ وَٱلزَّرۡعَ مُخۡتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيۡتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَٰبِهٗا وَغَيۡرَ مُتَشَٰبِهٖۚ كُلُواْ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ وَلَا تُسۡرِفُوٓاْۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡرِفِينَ
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெள; வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீத்த மரங்கள் இன்னும் அதன் கனிகள் மாறுபட்ட விளைச்சலையும், ஒலிவத்தையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தவன் அவன்தான். அவை காய்த்தால் அதன் கனிகளிலிருந்து புசியுங்கள். அவற்றின் அறுவடை நாளில் அதனுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் (அல்லாஹ்) நேசிக்க மாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف