47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).
الترجمة التاميلية
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَسۡتَمِعُونَ بِهِۦٓ إِذۡ يَسۡتَمِعُونَ إِلَيۡكَ وَإِذۡ هُمۡ نَجۡوَىٰٓ إِذۡ يَقُولُ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلٗا مَّسۡحُورًا
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் உமக்கு செவிமடுக்கும்போது எதற்காக செவிமடுக்கின்றனர் என்பதையும் இன்னும் அவர்கள் தனித்து பேசுபவர்களாக இருக்கும் போது(ம்), “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்ந்த ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை”என்று அநியாயக்காரர்கள் கூறும் போது(ம் அவர்கள் கூறுவதை) நாம் மிக அறிந்தவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف