43. என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைக்கப்படுவதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக அதற்குத் தகுதி இல்லை என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை).
الترجمة التاميلية
لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ
"என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
கண்டிப்பாக நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைக்கின்றீர்களோ அவற்றுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் எவ்வித பிரார்த்தனையும் இல்லை. (-நீங்கள் கேட்கின்ற எந்த பிரார்த்தனையும் அவை செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திரும்புவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக வரம்புமீறிகள், அவர்கள்தான் நரகவாசிகள்.
الترجمة التاميلية - عمر شريف