65. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக.
الترجمة التاميلية
قُلۡ هُوَ ٱلۡقَادِرُ عَلَىٰٓ أَن يَبۡعَثَ عَلَيۡكُمۡ عَذَابٗا مِّن فَوۡقِكُمۡ أَوۡ مِن تَحۡتِ أَرۡجُلِكُمۡ أَوۡ يَلۡبِسَكُمۡ شِيَعٗا وَيُذِيقَ بَعۡضَكُم بَأۡسَ بَعۡضٍۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَفۡقَهُونَ
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "உங்களுக்கு மேலிருந்து அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிருந்து உங்கள் மீது வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக கலந்து, உங்களில் சிலருக்கு சிலருடைய ஆற்றலை சுவைக்க வைப்பதற்கும் அவன்தான் சக்தியுள்ளவன்.'' அவர்கள் விளங்குவதற்காக வசனங்களை எவ்வாறு விவரிக்கிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக.
الترجمة التاميلية - عمر شريف