17. (நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية
وَإِن يَمۡسَسۡكَ ٱللَّهُ بِضُرّٖ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَۖ وَإِن يَمۡسَسۡكَ بِخَيۡرٖ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
"(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அல்லாஹ் உம்மை ஒரு சிரமத்தைக் கொண்டு தொட்டால், அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. உம்மை ஒரு நன்மையைக்கொண்டு தொட்டால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية - عمر شريف