165. அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். உங்களில் சிலரை மற்றவர்களைவிட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கிறான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
وَهُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَـٰٓئِفَ ٱلۡأَرۡضِ وَرَفَعَ بَعۡضَكُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَبۡلُوَكُمۡ فِي مَآ ءَاتَىٰكُمۡۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمُۢ
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் உங்களை பூமியில் (முன் சென்றவர்களின்) வழிதோன்றல்களாக (பிரதிநிதிகளாக) ஆக்கினான். உங்களுக்கு (அவன்) கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலருக்கு மேல் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும் நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف