152. ‘‘அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுங்கள். ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை (உங்கள் இறைவன்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
الترجمة التاميلية
وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَٱلۡمِيزَانَ بِٱلۡقِسۡطِۖ لَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۖ وَإِذَا قُلۡتُمۡ فَٱعۡدِلُواْ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰۖ وَبِعَهۡدِ ٱللَّهِ أَوۡفُواْۚ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அநாதையின் செல்வத்தை அவர் அவருடைய பருவத்தை அடையும் வரை மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். அளவையையும் நிறுவையையும் நீதமாக முழுமைப்படுத்துங்கள். ஓர் ஆன்மாவிற்கு அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் கொடுப்பதேயில்லை. நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக கூறுங்கள். அல்லாஹ்வின் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். இவை, நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றைக் கொண்டு (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்.
الترجمة التاميلية - عمر شريف