61. அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகிறான். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை.
الترجمة التاميلية
ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف