15. அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன், அர்ஷுக்கு சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது தன் கட்டளையை வஹ்யி மூலம் அவன் இறக்கிவைக்கிறான்.
الترجمة التاميلية
رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلۡعَرۡشِ يُلۡقِي ٱلرُّوحَ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوۡمَ ٱلتَّلَاقِ
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக்கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளையை உள்ளடக்கிய வஹ்யை இறக்கினான் (அவர் உலக மக்கள் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (அவர்களை) எச்சரிப்பதற்காக (வேதத்தை இறக்கினான்).
الترجمة التاميلية - عمر شريف