80. (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
الترجمة التاميلية
وَحَآجَّهُۥ قَوۡمُهُۥۚ قَالَ أَتُحَـٰٓجُّوٓنِّي فِي ٱللَّهِ وَقَدۡ هَدَىٰنِۚ وَلَآ أَخَافُ مَا تُشۡرِكُونَ بِهِۦٓ إِلَّآ أَن يَشَآءَ رَبِّي شَيۡـٔٗاۚ وَسِعَ رَبِّي كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ أَفَلَا تَتَذَكَّرُونَ
அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
அவருடன் அவருடைய சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர் கூறினார்: "நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அவன் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான். அவனுக்கு நீங்கள் இணைவைப்பதை பயப்பட மாட்டேன் என் இறைவன் எதையும் நாடினால் தவிர. என் இறைவனின் அறிவு எல்லாவற்றையும் விட விசாலமானது. நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?''
الترجمة التاميلية - عمر شريف