38. பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.
الترجمة التاميلية
وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا طَـٰٓئِرٖ يَطِيرُ بِجَنَاحَيۡهِ إِلَّآ أُمَمٌ أَمۡثَالُكُمۚ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمۡ يُحۡشَرُونَ
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
பூமியில் ஊருவதும்; தன் இரு இறக்கைகளால் பறப்பதும் உங்களைப் போன்ற படைப்புகளே தவிர வேறில்லை. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف