21. (இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிக தீவிரமானவன். (எனவே அவனது சூழ்ச்சி உங்கள் சூழ்ச்சியைவிட முந்திவிடும்)'' என்று கூறுவீராக. நிச்சயமாக நம் தூதர்(களாகிய வானவர்)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
الترجمة التاميلية
وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ مِّنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُمۡ إِذَا لَهُم مَّكۡرٞ فِيٓ ءَايَاتِنَاۚ قُلِ ٱللَّهُ أَسۡرَعُ مَكۡرًاۚ إِنَّ رُسُلَنَا يَكۡتُبُونَ مَا تَمۡكُرُونَ
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; "திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
மனிதர்களுக்கு தங்களைத் தீண்டிய ஒரு துன்பத்திற்கு பின்னர் ஒரு கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி (சிந்தனை தோன்றுகிறது). (நபியே!) அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்”என்று கூறுவீராக! நிச்சயமாக நம் (வானவத்) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்.
الترجمة التاميلية - عمر شريف