197. ஹஜ்ஜூ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்களில்தான். ஆகவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜூ (மாதத்தின் பத்தாம் தேதி) வரை வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜூடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக்கொள்ள வேண்டியவற்றில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். ஆதலால், அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜூடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.
الترجمة التاميلية
ٱلۡحَجُّ أَشۡهُرٞ مَّعۡلُومَٰتٞۚ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَتَزَوَّدُواْ فَإِنَّ خَيۡرَ ٱلزَّادِ ٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُونِ يَـٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
ஹஜ்ஜு அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ (அவருக்கு) ஹஜ்ஜில் தாம்பத்திய உறவு அறவே (அனுமதி) இல்லை; தீச்சொல் பேசுதல் அறவே இல்லை; தர்க்கம் அறவே இல்லை. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். கட்டுச் சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது அல்லாஹ்வை அஞ்சுவதுதான். அறிவாளிகளே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف