263. (தர்மம் செய்து அதை வாங்கியவனுக்குத்) துன்பம் தொடரும்(படியாகச் செய்யும்) தர்மத்தைவிட (அன்புடன் கூறும்) இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலாகும். அல்லாஹ் எத்தேவையுமற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்.
الترجمة التاميلية
۞قَوۡلٞ مَّعۡرُوفٞ وَمَغۡفِرَةٌ خَيۡرٞ مِّن صَدَقَةٖ يَتۡبَعُهَآ أَذٗىۗ وَٱللَّهُ غَنِيٌّ حَلِيمٞ
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.
Jan Trust Foundation - Tamil translation
துன்புறுத்துவது தொடர்கிற தர்மத்தைவிட நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும். அல்லாஹ் மகா செல்வன், பெரும் சகிப்பாளன்.
الترجمة التاميلية - عمر شريف