203. (நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜூ மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள்வரை (‘மினா' என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை ‘திக்ரு' செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறையச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்!
الترجمة التاميلية
۞وَٱذۡكُرُواْ ٱللَّهَ فِيٓ أَيَّامٖ مَّعۡدُودَٰتٖۚ فَمَن تَعَجَّلَ فِي يَوۡمَيۡنِ فَلَآ إِثۡمَ عَلَيۡهِ وَمَن تَأَخَّرَ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۖ لِمَنِ ٱتَّقَىٰۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ إِلَيۡهِ تُحۡشَرُونَ
குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
எண்ணப்பட்ட நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். எவர் இரண்டு நாள்களில் (புறப்பட) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே பாவமில்லை. எவர் தாமதித்தாரோ அவர் மீதும் அறவே பாவமில்லை. (அதாவது) அல்லாஹ்வை அஞ்சியவருக்கு (பாவமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف