17. இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (அதாவது அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
الترجمة التاميلية
مَثَلُهُمۡ كَمَثَلِ ٱلَّذِي ٱسۡتَوۡقَدَ نَارٗا فَلَمَّآ أَضَآءَتۡ مَا حَوۡلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمۡ وَتَرَكَهُمۡ فِي ظُلُمَٰتٖ لَّا يُبۡصِرُونَ
இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அல்லாஹ் அவர்களின் ஒளியைக் கொண்டு சென்றான். இன்னும் அவர்கள் பார்க்கமுடியாத இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.
الترجمة التاميلية - عمر شريف