42. மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
الترجمة التاميلية
ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் கைப்பற்றுகின்றான். இன்னும் (அவ்வாறே இதுவரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன் (உயிர்) கைப்பற்றுகின்றான். (இறந்தவர்களின் ஆன்மாக்களும் உயிருள்ளவர்களின் ஆன்மாக்களும் தூக்கத்தில் சந்திக்கின்றன. பிறகு அவை பிரியும் போது) மரணத்தை (முன்பே) எதன் மீது விதித்து விட்டானோ அதை (-முன்பே மரணித்துவிட்டதை மீண்டும் உலகிற்கு வர முடியாதவாறு) அவன் தடுத்துக் கொள்கிறான். மற்றொன்றை (-மரணித்திருக்காத, உலகில் வாழ்ந்து வருகின்ற ஆன்மாவை) அவன் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) விட்டு வைக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
الترجمة التاميلية - عمر شريف