26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தான் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.
الترجمة التاميلية
ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَـٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுகு; கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அவர்கள் (-நல்லவர்கள்) இவர்கள் (-பாவிகள்) சொல்வதிலிருந்து நீக்கப்பட்டவர்கள். (பாவிகள் சுமத்தும் பழியிலிருந்து நல்லவர்கள் நீங்கியவர்கள் ஆவர்.) அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான அருட்கொடையும் (-சொர்கமும்) உண்டு.
الترجمة التاميلية - عمر شريف