67. (நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் என்னை வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உமது காலத்தில் உமக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். மேலும் நீர் அவர்களை உமது இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழைப்பீராக. நிச்சயமாக நீர் நேரான வழியில்தான் இருக்கிறீர்.
الترجمة التاميلية
لِّكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكًا هُمۡ نَاسِكُوهُۖ فَلَا يُنَٰزِعُنَّكَ فِي ٱلۡأَمۡرِۚ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ إِنَّكَ لَعَلَىٰ هُدٗى مُّسۡتَقِيمٖ
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்; நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
Jan Trust Foundation - Tamil translation
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் ஒரு பலியை (பிராணிகளை அறுக்கின்ற முறையை) ஏற்படுத்தினோம். அவர்கள் அதை (அதன்படி) பலியிடுவார்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் அந்த விஷயத்தில் (-அறுத்ததை சாப்பிடுவதிலும் இறந்து விட்டதை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கிக்க வேண்டாம். உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்.
الترجمة التاميلية - عمر شريف