29. மூஸா தன் தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்விகளில் ஒருத்தியை திருமணம் செய்தார். பிறகு,) தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (‘ஸீனாய்' என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி ‘‘ நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்கு சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி ஒரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
۞فَلَمَّا قَضَىٰ مُوسَى ٱلۡأَجَلَ وَسَارَ بِأَهۡلِهِۦٓ ءَانَسَ مِن جَانِبِ ٱلطُّورِ نَارٗاۖ قَالَ لِأَهۡلِهِ ٱمۡكُثُوٓاْ إِنِّيٓ ءَانَسۡتُ نَارٗا لَّعَلِّيٓ ءَاتِيكُم مِّنۡهَا بِخَبَرٍ أَوۡ جَذۡوَةٖ مِّنَ ٱلنَّارِ لَعَلَّكُمۡ تَصۡطَلُونَ
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
மூசா (அந்த) தவணையை முடித்து, தனது குடும்பத்தினரோடு (புறப்பட்டு) சென்றபோது மலையின் அருகில் நெருப்பைப் பார்த்தார். தனது குடும்பத்தினரிடம் கூறினார்: “நீங்கள் தாமதியுங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது நீங்கள் குளிர்காய்வதற்காக நெருப்பின் கங்கை (-கொள்ளிக் கட்டையை) நான் உங்களிடம் கொண்டு வருகிறேன்.”
الترجمة التاميلية - عمر شريف