68. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்.
الترجمة التاميلية
قُلۡ يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَسۡتُمۡ عَلَىٰ شَيۡءٍ حَتَّىٰ تُقِيمُواْ ٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُمۡۗ وَلَيَزِيدَنَّ كَثِيرٗا مِّنۡهُم مَّآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ طُغۡيَٰنٗا وَكُفۡرٗاۖ فَلَا تَأۡسَ عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ
"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்; ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக, "வேதக்காரர்களே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.''உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான சமுதாயத்தைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.
الترجمة التاميلية - عمر شريف