21. அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.
الترجمة التاميلية
أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي يَرۡزُقُكُمۡ إِنۡ أَمۡسَكَ رِزۡقَهُۥۚ بَل لَّجُّواْ فِي عُتُوّٖ وَنُفُورٍ
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கின்ற இவர்கள் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு அப்படி யாரும் இருக்கின்றார்களா?) மாறாக, அவர்கள் வரம்பு மீறுவதிலும் விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்.
الترجمة التاميلية - عمر شريف